அண்ணனின் திருமணத்தில் தன் கல்யாண ஆசையை வெளிப்படுத்திய நெப்போலியனின் 2-ஆவது மகன்

0
222
- Advertisement -

தனுஷ் திருமணத்தில் தன்னுடைய திருமணம் குறித்து நெப்போலியன் இரண்டாவது மகன் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே நெப்போலியன் மகனின் திருமணம் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

இதில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகனின் சிகிச்சைக்காக இந்தியாவை விட்டுச் சென்று குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். அமெரிக்காவில் நெப்போலியன் ஹைடெக் விவசாயம் செய்வதோடு, ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி அதற்கு தனுஷை முதலாளி ஆக்கியிருக்கிறார். அந்த நிறுவனத்தில் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பணி புரிவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தனுஷ் நிச்சயதார்த்தம்:

அமர்ந்த இடத்திலிருந்து தொழில்நுட்பத்தின் வசதியோடு அந்த நிறுவனத்தை நிர்வாகித்து வருகிறார் தனுஷ். இப்படிப்பட்ட சூழலில் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில் தான் அவருக்கு திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவோடு நிச்சயதார்த்தம் நடந்தது. அதோடு தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது. பின், இவர்களது திருமணம் ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் புறப்பட்டனர்.

திருமணம் குறித்த தகவல்:

ஜப்பானில் திருமணம் நடத்த வேண்டும் என்பது தனுஷின் ஆசை என்று கூறப்படுகிறது. இத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார், மீனா, பாண்டியராஜன், யூடியூபர் இர்ஃபான் என பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்தனர். அவர்களை நெப்போலியன் ஜப்பான் விமான நிலையத்துக்குச் சென்று அன்போடு வரவேற்றார். அந்தத் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. மேலும், திருமணத்துக்கு முன்பாக நலங்கு, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி கொடுத்தார்.

-விளம்பரம்-

தனுஷ்-அக்ஷ்யா திருமணம்:

பின்பு மணமக்கள் தனுஷ் மட்டும் அக்ஷயாவிற்கு போட்டோஷாப் நடத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று காலை தனுஷ்-அக்ஷ்யா திருமணம் கோலாகலமாய் தமிழர்களின் கலாச்சாரப்படி நடந்தது. திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் சிறப்பான உடையை அணிந்திருந்தனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு கலா மாஸ்டர் நெப்போலியன் குடும்பத்தினரிடமிருந்து பேசி இருந்தார்.

நெப்போலியன் இரண்டாவது மகன் திருமணம்:

அப்போது தனுஷின் தம்பி குணாலிடம், உங்களுடைய அண்ணியை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, அவர் ரொம்ப எளிமையாக எல்லோரிடமும் பழகுவார் என்று கூறியிருந்தார். உடனே கலா மாஸ்டர், அண்ணனுக்கு ஜப்பானில் கல்யாணம், உனக்கு எங்கே என்று கேட்டார். அதற்கு குணால், எனக்கு நிலவில் கல்யாணம் நடக்கும் என்று கூறியிருந்தார். இதைக் கேட்டு கலா மாஸ்டர் ஷாக் ஆனாலும் நெப்போலியன் மற்றும் அவருடைய மனைவியை பார்த்து உங்களுடைய சொத்தை அழிக்காமல் விடமாட்டார்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். உடனே தனுஷ், என்னுடைய தம்பி ஆசைப்பட்ட மாதிரி எதிர்காலத்தில் நிலவில் திருமணம் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement