தன்னுடைய மனைவி குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகர் நெப்போலியன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அங்கே இவர் ஹைடெக் விவசாயி ஆகவும், பெரிய தொழில் அதிபராகவும் இருக்கிறார். இப்படி இவர் இருப்பதற்கு காரணமே அவருடைய மகன் தனுஷ் தான். தனுசிற்கு நான்கு வயது இருக்கும்போதே தசைச் சிதைவு என்ற நோய் ஏற்பட்டது. இதற்காக நெப்போலியன் பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தார். இருந்தும் பயனில்லாமல் போனது. பின் இவர் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இந்த நோய்யை குணப்படுத்தி இருந்தார். ஆனால், முழுவதுமாக குணம் ஆகவில்லை.
நெப்போலியன் மகன் திருமணம்:
பின் தனுஷ் உயர் சிகிச்சைக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கேயே தன் மகனுக்காக தங்கிவிட்டார். தனுஷும் தன்னிடம் தன் குறையை மறந்து பல துறைகளில் சாதித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் நடத்தி வரும் பல நிறுவனங்களை தனுஷ் தான் கவனித்து வருகிறார். இதனால் தனுசுக்காகவே ஒரு தனி நிறுவனத்தை நெப்போலியன் உருவாக்கி இருக்கிறார். தற்போது தனுசுக்கு 25 வயது ஆனதால் நெப்போலியன் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்.

மணமகள் குறித்த தகவல்:
சமீபத்தில் நெப்போலியன் மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நெப்போலியனின் வருங்கால மருமகள் பெயர் அக்ஷயா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். அங்கு மூலக்கரை பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் தான் அக்ஷயா. இவரைத்தான் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் செய்ய இருக்கிறார். அதோடு தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ காலின் மூலம் நிச்சயதார்த்தம் நடந்தது.

நெப்போலியன் பேட்டி:
ஜப்பானில் தனுஷ் திருமணம் நடக்க இருக்கிறது. தற்போது திருமண வேலைகளில் நெப்போலியன் பிசியாக இருக்கிறார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நெப்போலியன் தன்னுடைய மனைவியை குறித்து சொன்ன விஷயம் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நெப்போலியன், என்னுடைய மனைவியை நான் பெண்பார்க்க சென்ற போது அவர் கல்லூரி சென்று இருந்தார்.

தன் மனைவி குறித்து சொன்னது:
பின் அவர் என்னை விசாரித்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதைக்கேட்டு எல்லோருமே பதறிப் போனார்கள். என்ன காரணம்? என்று கேட்டதற்கு அவர் எஜமான் படத்தில் வயிற்றில் உள்ள கருவை கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரன். இவருடன் எப்படி குடும்பம் நடத்துவது? என்று கேட்டிருந்தார். அதெல்லாம் சினிமா. நிஜத்தில் அவர் ரொம்ப நல்லவர். விசாரிக்காமல் பெண் கொடுப்பேனா என்றெல்லாம் ஜெயசுதாவின் உடைய அப்பா அவரை சமாதானம் செய்திருந்தார். அதற்கு பின் தான் அவர் சம்மதித்து திருமணம் நடந்தது என்று கூறியிருந்தார்.






