நடிகை அபர்ணதி மீது இயக்குனர் ஸ்ரீ வெற்றி கூறியிருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அபர்ணதி குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்ணதி. தற்போது அபர்ணதி ஹீரோயினியாக நடித்திருக்கும் நாற்கரப்போர் படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீ வெற்றி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். மேலும், கடந்த வாரம் சென்னையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், படத்தின் நாயகி அபர்ணதி வரவில்லை. பின் விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கு வராது இருப்பது சாபக்கேடாக ஆகிவிட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்கு வர சொல்லி இயக்குனர் போன் பண்ணி அபர்ணதி இடம் கேட்டதற்கு நான் வரமாட்டேன், எனக்கு புரமோஷனுக்கு தனியாக காசு வேண்டும் என்று சொன்னார். இந்த விஷயத்தை இயக்குனர் என்னிடம் சொன்னார். பின் நானும் அவருக்கு போன் பண்ணி பேசினேன். அவர், வர முடியாது என்று சொல்லி ரெண்டு மூணு கண்டிஷன்ஸ் போட்டார்.
அபர்ணதி குறித்து தயாரிப்பாளர் சொன்னது:
அதில் மேடையில் அவர் யாருடன் உட்கார வேண்டும், யாரெல்லாம் இருக்கணும், தனக்கு சமமானவர்கள் தான் உட்கார வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். இது என்னை ரொம்பவே கோபப்படுத்தி இருந்தது. கடைசியாக வருவீர்களா? மாட்டீர்களா? என்று கேட்டதற்கு 3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று சொன்னார். நீங்கள் வரவே வேண்டாம் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டேன். அதற்குப் பின் இரண்டு நாள் கழித்து எனக்கு போன் செய்து, சாரி சார் தெரியாமல் பேசிவிட்டேன், ஃபங்ஷனுக்கு வரேன் என்று சொன்னார். ஆனால், போன் பண்ணி கேட்டால் வெளியூரில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் வெளியூரிலேயே இருக்கட்டும் என்று விமர்சித்து பேசி இருந்தார்.
அபர்ணதி அளித்தபேட்டி :
பின் இது தொடர்பாக நடிகை அபர்ணதி, புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நான் பணம் கேட்பதாக படக்குழுவினர் அபாண்டமாக என் மீது பழி போட்டு இருக்கிறார்கள். நான் எந்த பணமும் கேட்கவில்லை. இதை நான் 200 சதவீதம் உறுதியாக சொல்வேன். படம் முடிந்ததும் படத்தின் டப்பிங் பேசுவதற்காகவோ அல்லது புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கோ என்னை தயாரிப்பாளர், இயக்குனர் தரப்பிலிருந்து யாருமே கூப்பிடவில்லை. நான் இப்போதும் சென்னையில் தான் இருக்கிறேன். அதோடு இந்த படத்தில் எனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியும் இருக்கிறது என்று கூறி இருந்தார்.
இயக்குனர் பேட்டி :
இந்நிலையில் இதற்கு படத்தின் இயக்குனர் ஸ்ரீ வெற்றி, அபர்ணதி சொல்லும் கருத்தில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. இந்த படத்திற்காக அபர்ணதி இடம் 40 நாட்கள் கால்ஷீட் வாங்கி இருந்தோம். அதற்காக அவருக்கு 13 லட்சம் ஒப்பந்தப்படி முழுத்தொகையும் கொடுத்து விட்டோம். அதோடு அவருடைய காட்சிகளை 36 நாட்களிலேயே முடித்து விட்டோம். படத்தினுடைய கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு பொருத்தமாக இருந்தாரோ அந்த அளவிற்கு அவர் குரல் பொருந்தவில்லை. இதனால் டப்பிங் கலைஞர் வைத்து முடித்தோம். அந்த காட்சியை பார்த்துவிட்டு இதே போல் நான் பேசி கொடுக்கிறேன் சார் என்றெல்லாம் அபர்ணதி சொன்னார்.
அபர்ணதி குறித்து சொன்னது :
இதை நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அப்போது தான், எனக்கு 3 லட்சம் கொடுத்து விடுங்கள். நான் புரோமோஷன் பண்ணி விடுகிறேன் என்று சொன்னார். ஆனால், தயாரிப்பாளர் மேற்கொண்டு பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று சொன்னார். அதற்குப் பிறகுதான் அபர்ணதி இல்லாமலேயே படத்தை புரமோஷன் செய்ய முடிவெடுத்தோம். தயாரிப்பாளர் எவ்வளவோ பேசியும் அபர்ணதி, 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அதனால் தான் படத்தினுடைய ட்ரெய்லர் விழாவில் தன்னுடைய கோபத்தை தயாரிப்பாளர் காண்பித்து இருந்தார். சமூகப் பிரச்சினையை பேசும் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கலைஞர்களும் அதே பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.