குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹீரோவாக நடித்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ளது. தன் மகனின் கனவை நினைவாக்க தந்தை போராடியதை குறித்து வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. குடுகுடுப்பு இனத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகனை சினிமாவில் கதாநாயகனாக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டார். குடுகுடுப்பு தந்தை ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் படம் எடுத்து மிரட்டி உள்ளார். அந்த படம் தான் நறுவி. இந்த படத்தின் கதாநாயகன் பெயர் ராக்கி செல்லா.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ராக்கி செல்லா என்பவர் குடுகுடுப்பை இனத்தை சேர்ந்தவர். பின் தங்கிய இனத்தை இருந்த இவர் கல்லூரி சென்று பட்டம் பெற்றார். தற்போது ராக்கி செல்லா கோவையில் வசிக்கும் வருகிறார். ராக்கி செல்லா வெளியாகாத சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் ராக்கி செல்லா நடிக்கவும் செய்தார். இதனால் ராக்கி செல்லாவின் தந்தை துரைராஜ் தன் மகன் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறான் என்று பலரிடம் பெருமையாக கூறி வந்துள்ளார்.
ஆனால், துரதிஸ்டவசமாக ராக்கி செல்லா நடித்த முதல் படம் வெளியாகவில்லை. பின் எல்லோரும் உங்கள் மகன் சினிமாவில் நடிப்பதாக சொன்னீர்களே, என்ன ஆச்சு? என்று துரைராஜ் இடம் கேட்டார்கள். துரைராஜ் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால் வேதனை அடைந்த துரைராஜ் தன் மகனை சினிமாவில் ஹீரோ ஆக்கியே தீருவேன் என்று சபதம் மேற்கொண்டார். பின் தானே அந்த படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தார். அப்படி துரைராஜ் தயாரித்த படம் தான் நறுவி. இந்தப் படத்தின் கதாநாயகன் தான் ராக்கி செல்லா. இந்த படத்தை ராஜா முரளிதரன் இயக்கியிருந்தார். மேலும், குடுகுடுப்பு சமுதாயத்தை சேர்ந்த ராக்கி செல்லா நடித்த படத்தை எடுக்க அதே சமுதாயத்தை சேர்ந்த பலரும் உதவியுள்ளனர்.
இந்த படம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஷ்ணு திரையரங்கில் வெளியானது. இந்த படம் வெளியானதை அடுத்து குடுகுடுப்பு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தியேட்டரில் திரண்டனர். தாரை தப்பட்டை அடித்து மகிழ்ந்து கொண்டாடினர். மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் துரைராஜ் கூறியது, இந்த படத்தை எடுக்க எனக்கு எங்கள் இனமான குடுகுடுப்பை சேர்ந்த மக்கள் பல்வேறு பகுதியில் இருந்து பல வகைகளில் எனக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். இந்த திரைப்படம் வெற்றி அடையவேண்டும் என்றும் என் மகன் கதாநாயகனாக வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசையாக இருந்தது. அந்த மக்களுக்காக நறுவி திரைப்படத்தை காணிக்கையாக்குக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.