அசிங்கப்பட்ட ஒட்டுமொத்த நடிகர்கள் ! மலேசிய கலைநிகழ்ச்சி தோல்விக்கான 8 காரணங்கள் !

0
11568
Tamil-actors
- Advertisement -

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நட்சத்திர களைவிழா நடைபெற்றது. இதனுடன் சேர்த்து பெரும் நிதியை திரட்ட நட்சத்திர கிரிக்கெட் மற்றும் நட்சத்திர கால்பந்து ஆகியவை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் மொத்தமாக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நட்சத்திர கலைவிழாவில் 300க்கும் மேற்பட்ட தமிழ் நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர்

-விளம்பரம்-

actorsகாரணங்கள் பல :

- Advertisement -

1.விஜய், அஜித் வரவில்லை. தமிழ் சினிமாவின் பாதி ரசிகர்களை கொண்டிருக்கும் இரு பெரும் நடிகர்கள் வரவில்லை என்றால் அந்த சினிமா நிகழ்ச்சி பாதி தோல்வி அடைந்தது போலதான். அதனுடன் சேர்த்து திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் வரவில்லை.

2.பல மூத்த கலைஞர்கள் அவமாணப்படுத்தப்பட்டனர். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், ஆர் சுந்தர்ராஜன், பார்த்திபன் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் அவமரியாதை செய்யப்பட்டனர்.

-விளம்பரம்-

kamal

3.இந்த விழாவை காண 40,000 பேர் வருவார்கள் என நினைத்தனர். ஆனால் வந்தது வெறும் 5000 பேர் மட்டுமே. அதிலும் 3000 பேர் இலவச டிக்கெட்டில் வந்தவர்கள். ரசிகர்களிடம் டிக்கெட் காசு வாங்கி கோடி கணக்கில் சம்பாரிக்கும் நடிகர்கள் இன்னும் மக்களின் பணத்தை சுரண்ட நினைக்கிறார்கள் என மலேசிய தமிழ் மக்கள் நினைத்தனர். இவ்வாறு சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விழாவை புறக்கணித்துவிட்டனர்.

4.மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிக்கூடங்கள் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் அதற்கு காசு செலவழிக்கமால், நடிகர்களுக்கு நாம் ஏன் காசு கொடுக்கவேண்டும் என மலேசிய தமிழ் மக்கள் நினைத்தனர்.

5.அதன் பின்னர் ஈவன்ட் மேனேஜமெண்ட் நிறுவனம் செய்த நிர்வாக கோளாறுகள். ‘மை ஈவன்ட்ஸ்’ என்னும் நிறுவனம் தான் இந்த விழாவை நடத்தியது. பாஸ்போர்ட்டில் இருந்த நடிகர்களின் பெயரும், அவர்களின் உண்மையான பெயரும் பொருத்தமாக இல்லாததால், சிலர் மலேசியாவுக்குச் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

6.ரஜினி போன்ற நடிகர்களுக்கு மட்டுமே பிசினஸ் கிளாஸில் டிக்கெட் போடப்பட்டது. மற்ற எல்லாருக்குமே எக்னாமிக் கிளாஸ் தான். ஆனால், நடிகை ஆன்ட்ரியா போன்ற சிலர் பிசினஸ் கிளாஸில் தான் டிக்கெட் வேண்டும் என்று அடம்பிடித்ததால், கடைசி நேரத்தில் டிக்கெட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாலும் பிரச்சனைகள் ஏற்பட்டன.

actors malasiya

7.மலெசியவில் நடிகர் நடிகைகள் பயண களைப்பை போக்க சிரிது நெரம் கூட ஓய்வெடுக்க முடியவில்லை. 320 பேருக்கு ஃபிளைட் டிக்கெட் புக் செய்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம், அத்தனை பேரும் வருவார்கள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே, தங்கும் இடம், உணவு போன்றவற்றை குறைவாகவே ஏற்பாடு செய்திருந்தார்கள். யாருடன் யாரைத் தங்கவைப்பது என்று எழுந்த சிக்கலும் குளறுபடிகளை அதிகப்படுத்திவிட்டது. இதனால் நடிகர்கள் தங்குவதில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.

8.ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமே எல்லாவற்றிற்கும் காரணம். ஏற்கெனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியையும் இந்த நிறுவனம் சொதப்பியிருக்கிறது

Advertisement