இமானுக்கு தேசிய விருதா ? இவங்களுக்கு தான் கொடுத்திருக்கனும் – மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள். (நீங்க என்ன சொல்றீங்க)

0
44280
imman
- Advertisement -

67-வது தேசிய திரைப்பட விருதுகள்நேற்று (மார்ச் 22) அறிவிக்கப்பட்டு இருந்தது, இதில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆண்டு தோறும் தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருது பட்டியலில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்த்திபன் இயக்கி தயாரித்து அவரே நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டிக்கு விருது என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. தேசிய விருது வென்றது குறித்து இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளதாவது, இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதற்காக நாங்கள் எதுவும் மெனக்கெடவில்லை. எந்த விருதும் கலைஞனுக்கு ஒரு ஊக்கம் தான் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனருக்கும் படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது. தேசிய விருது வென்ற தனுஷ், விஜய் சேதுபதி, இமான் ஆகியோருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதில் மற்றவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை விட ,இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது தான் பெரும் கேலிக்கு உள்ளாகி வருகிறது. இவரை விட அசுரன் படத்திற்காக ஜி வி பிரகாஷ், ஜெர்சி படத்திற்காக அனிருத் போன்ற யாராவது தேசிய விருதை வென்றிருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இது சம்மந்தமாக சமூக வலைத்தளத்திலும் பல்வேறு மீம்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

Advertisement