தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் கே எஸ். 1994ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டியது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி.அப்போது ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார். அந்த காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
அதே காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார். அந்த செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நம் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தோம்.அதன் பின்னர் இவரை பற்றி அறிய நாம் முற்பட்ட போது, அவரை எப்படியோ தொடர்பு கொண்டு நாம் பேசினோம். அவரின் பெயர் கீர்த்தி நாயுடு. நாட்டாமை படத்திற்கு பின்னர் கே எஸ் ரவிக்குமாரின் லிங்கா படத்தில் நடித்த போது அங்கே இருந்தவர்கள் பலரும் இவரை நாட்டாமை படத்தில் நடித்த நடிகை என்று நம்பவில்லை.
பின்னர் மேக்கப் போட்டு முடித்த பின்னர் கேஎஸ் ரவிக்குமார் இவரைக் கண்டதும் இவரை அடையாளம் கண்டுகொண்டு நீங்களா என்று ஆச்சரியப்பட்டார். ஆம், அந்த அளவிற்கு இத்தனை வருடம் ஆகியும் அதே இளமையுடன் இருக்கிறார். இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பிரபலமானது என்னவோ நாட்டாமை படத்தின் மூலமாக இருக்கலாம். ஆனால், இவர் இந்து , சேதுபதி ஐபிஎஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் மீனா, ரோஜா, ரம்பா என்று பல்வேறு முன்னணி நடிகைகளில் தோழியாக நடித்திருக்கிறார். அவ்வளவு ஏன் இவர் அஜித் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா 2’ படத்தில் கூட நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் படு மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.