1986-ல் வெளியான ‘கண்னுக்கு மை அழகு’ பாடலின் ஒரிஜினல் வெர்ஷன் இதான் – 7 ஆண்டுக்கு பின்னர் தான் Ar ரீ – மேக் பண்ணி இருக்கார். வீடியோ இதோ.

0
488
Arr
- Advertisement -

இந்திய அளவில் மிகப்பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் புகழ் பெற்று விளங்கியவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர் 1953 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். இவருடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவர் 1986 ஆம் ஆண்டு இசையமையத்த ‘கண்ணுக்கு மை அழகு’. இந்த பாடல் அப்போதே மிக பிரபலமாக இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் ரீமேக் செய்து பாடிய இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இசை புயல் என்ற அந்தஸ்துடன் இசையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார் ஏ ஆர் ரஹமான். இவருக்கு சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார்.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மான் இசை பயணம்:

தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஏ ஆர் ரஹ்மான் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார்.

ஏ ஆர் ரஹ்மான் மத மாற்றம்:

ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் ஒரு இந்து ஆர் இவரது இயற் பெயர் திலீப் குமார். 20 வயதில் தன் தந்தையின் இறப்பிற்கு பின்னர் முஸ்லிமாக மாறினார் ஏ ஆர் ரஹ்மான். அதற்கு முக்கிய காரணம் அவரின் தாய் தான். பின் முஸ்லிமாக மாறிய பின்னர் முஸ்லீம் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இவர் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரஹ்மான் வாங்கிய விருதுகள்:

இவரின் மகளுக்கு சமீபத்தில் தான் திருணம் நடந்தது. இப்படி குடும்பம், கேரியர் என்று இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார் ஏ.அட்.ரகுமான். மேலும், இவர் இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம். இப்படி இந்திய உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருக்கும் ஏ ஆர் ரகுமான் வேறு ஒரு பாடகரின் பாடலை ரீமேக் செய்திருக்கிறார் என்றால் பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

பாடலை ரீமேக் செய்த ஏ ஆர் ரஹ்மான் :

ஆமாங்க, 1986 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையில் வைரமுத்து வரிகளில் வெளியான கண்னுக்கு மை அழகு என்ற பாடலை இசையமைத்து இருந்தார். இந்த பாடலை 1993 ஆம் ஆண்டு வெளிவந்த புதியமுகம் என்ற படத்தில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ரீமிக்ஸ் செய்து இசையமைத்து இருக்கிறார். அந்த பாடல் மிகப் பிரபலமாக இருந்தது. தற்போது இந்த இரு பாடல்களையும் அசல் மற்றும் மறுஆக்கம் என்ற தலைப்பில் நெட்டிசன்கள் இணைத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement