ரஜினி,கமல்,விக்ரம் படங்களில் நடித்த வில்லன் நடிகர் மீது நாட்டாமை நடிகை பாலியல் குற்றச்சாட்டு…!

0
582
Naatamaiteacher

கடந்த சில நாட்களாக #metoo மொவேமென்ட் என்ற ஹேஸ் டேக் மூலம் நடிகை சின்மயி, வைரமுத்து மீது முன்வைத்துள்ள பாலியல் தொல்லை தான் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ராணி (அ) ரக்க்ஷா

Raani

சின்மயி குற்றச்சாட்டிற்கு பின்னர் பல்வேறு சினிமா துறை பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக வெளியில் கூறிவருகின்றனர். இந்நிலையில் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ராணி பிரபல நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரை அளித்துள்ளார்.

நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ராணி,ராமராஜன் நடித்த “வில்லுபாட்டுக்காரன்” படத்திலும் நடித்துள்ளார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் தனது பயணத்தை தொடந்து வருகிறார்.

நடிகர் சண்முகராஜன்:

Shanmugarajan

இந்நிலையில் நடிகை ராணி தமிழில் “சிவாஜி, அந்நியன் ,விருமாண்டி” போன்ற படங்களில் வில்லனாக நடித்த சண்முகராஜன் தன்னிடம் அங்கும் இங்கும் தொட்டு தவறாக நடந்து கொண்டார் என்றும், அதை தட்டிக்கேட்ட என் கணவரை அவர் தாக்கினார் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ராணி அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சண்முகராஜனை காவல் துறையினர் காவல் துறைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு நடிகர் சண்முகராஜன் ,நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்டதால் இருவரும் சமாதானம்ஆகியுள்ளார்.