எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது அடையாளம் தெரியாத நபர் படம் பிடித்தார் என்று நவ்னீத் ராணா போலீசில் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்த நடிகை நவ்னீத் கெளர். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் அரசியலில் குதித்து விட்டார். அதிலும் இவர் சில ஆண்டுகாலமாகவே அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நவ்னீத் கெளர் 2011 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இவர் 2019 ஆம் ஆண்டு அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம் பியும் ஆனார். மேலும், எம்பி, எம்எல்ஏவாக உள்ள மனைவி- கணவன் இருவரும் சிவசேனாவுக்கு தொடர்ந்து போராட்டங்கள் மூலம் குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்தனர். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் கடந்த மாதம் 23ஆம் தேதி மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டு முன்பு மக்களின் துன்பங்கள் நீங்க அனுமன் சாலிசா எனப்படும் அனுமன் மந்திரம் பாடப்படும் என்று கணவன்- மனைவி இருவரும் அறிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நவ்னீத்-ரவி ராணா:
இதனை அடுத்து கணவன் மனைவி இருவரையும் மகாராஷ்டிரா போலீசார் தேச விரோத வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து இருந்தனர். ஆனால், அதற்கு முன் தங்களை கைது செய்ய வந்த பொழுது அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நவ்னீத் கெளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றங்கள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தனி நபருடைய வீட்டின் முன்பாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மந்திரங்களை சொல்லுவது சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விஷயம்.
நீதிபதி சொன்ன அறிவுரை:
நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகிப்போர் அதற்கேற்றார்போல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி இருந்தார். மேலும், எம்.பி, எம்.எல்.ஏ வான இருவரும் கைதாகி 12 நாட்கள் ஆகியும் ஜாமீன் கிடைக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் சிறையில் இவர்கள் இருவருக்கும் முதல் வகுப்பு வழங்கவில்லை என்றும் இதனால் நவ்னீத் கெளர் மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோர் தரையில் படுத்து உறங்குவதால் பல உடல் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது என்று நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்கள்.
நவ்னீத்துக்கு வந்த நெஞ்சுவலி :
பின் பல போராட்டங்களுக்கு பிறகு ரவி ராணா மற்றும் நவ்னீத் கெளர் ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நவ்னீத் ராணா எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் போது அடையாளம் தெரியாத நபர் படம் பிடித்திருக்கிறார் என்று வழக்கு தொடரப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த நவ்னீத் ராணாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நவ்னீத் போலீசில் அளித்த புகார்:
மேலும், நவ்னீத் ராணாவுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரை யாரோ அடையாளம் தெரியாத நபர் படம் எடுத்ததாக புகார் எடுத்ததாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது உண்மையாலுமே நடந்ததா? இல்லை பொய் குற்றச்சாட்டா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.