நாயகன் பட நடிகையா இது ? இப்போ எப்படி இருகாங்க பாருங்க. இவருக்கு இவ்ளோ பெரிய மகனா.

0
4539
nayagan
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹிட் படத்தில் நடித்த எத்தனையோ நடிகர் நடிகைகள் அதன் பின்னர் என்ன ஆனார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் நாயகன் படத்தில் கமலின் மகளாக நடித்த நடிகையை யாராலும் மறந்திருக்க முடியாது. நாயகன் படத்தில் வேலு நாயக்கர் கமலுக்கு மகளாக நடித்து அசத்தி இருப்பார் கார்த்திகா.கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் கார்த்திகா. அவருடைய அப்பா ஒரு மிலிட்டரி ஆபீசர். அவருடைய உண்மையான பெயர் சுனதா.

-விளம்பரம்-

ஆனால் படங்களில் நடிப்பதற்காக கார்த்திகா எனவைத்துக்கொண்டார். இவர் தமிழில் அறிமுகமானது நாயகன் படம் மூலமாக இருக்கலாம். ஆனால், மலையாளத்தில் 80களில் புகழ்பெற்று விளங்கிய டாவ்-5 நடிகைகளில் கரதிகாவும் ஒருவர். சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தும் அவர் முதலில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தவர். அவரது நடை உடை பாவனைகளை பார்த்து மலையாள இயக்குனர் பாலச்சந்திர மேனன் அவரை 1985ஆம் ஆண்டு ‘மணிசேப்பு தோரணபோல்’ என்ற ஒரு மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

- Advertisement -

முதல் படத்திலேயே மோகன் லாலுடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்று நடிப்பில் அசத்தினார் கார்த்திகா.இதில் நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக செம்மயாக நடித்து அசத்தினார். இதனால் தமிழ் ரசசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் கார்த்திகா. நடிப்பின் உச்சத்தில் இருந்த கார்த்திகா திடீரென சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

1991 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பின்னர் எந்த ஒரு புகழ் வெளிச்சமும் வேண்டாம் என் ஒதுக்கி விட்டு தனது கணவருடன் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு விஷ்ணு என்ற மகனும் பிறந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் இவருக்கு பூஜா என்பவருடன் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement