நயன்தாரா- தனுஷ் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் போட்டு இருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாவே இணையத்தில் தனுஷ்-நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள்.
நயன் – தனுஷ் சர்ச்சை :
மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதன் காரணமாக தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது. பின் நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து, தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் ஆவணப்படத்தில் பெற்றிருந்தன.

தனுஷ் தொடர்ந்த வழக்கு :
அதனால், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் அவர்கள் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் தனுஷ், பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், நானும் ரவுடிதான் பட காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்குப்பின் நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்திய காட்சியை இந்த ஆவண படத்தில் இணைக்கவில்லை. எங்களுடைய சொந்த சேகரிப்பில் இருந்தே இந்த காட்சியை பயன்படுத்தியதாக கூறியிருந்தார். பின் இது தொடர்பாக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் Netflix நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தது நீதிமன்றம். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.
தனுஷ் தரப்பு வாதம்:
அப்போது தனுஷ் தரப்பில், நானும் ரவுடிதான் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் உட்பட அனைத்து விஷயங்களுக்குமான காப்புரிமையை அனைத்தும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா அணிந்திருக்கும் ஆடையின் மீது கூட காப்புரிமை இருக்கிறது. உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் தான் நயன்தாரா கையெழுத்திட்டு இருக்கிறார். இதை கருத்தில் கொண்டு வழக்கை தடை செய்யாமல் விசாரிக்க எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்குமென்டரியில் நானும் ரவுடிதான் பிடிஎஸ் காட்சியாக 28 வினாடி வீடியோவை நயன்தாரா பயன்படுத்தியிருக்கிறார். இதனால் பதிப்புரிமை சட்டம் 1957 இன் படி விதியை மீறி இருக்கிறது. இந்த சிவில் வழக்கு நீதிமன்றத்தால் நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதன்பின் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில், உண்டர்பார் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் இல்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=a9_JR3VCpTA
நயன் தரப்பு வாதம்:
அதனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. உண்டர்பாரின் மனுவை நிராகரிக்க வேண்டும். உண்டர்பார் நிறுவனம் 1957ஆம் ஆண்டு மதிப்புரிமை சட்டம் 62வது பிரிவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் நீதிமன்றத்திலோ அல்லது கடிதங்கள் காப்புரிமை சட்டம் 1985 ல் 12 படி நெட்பிளிக்ஸ் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கும் மும்பை உயர்நீதிமன்றத்தையோ தான் அணுகி இருக்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு தனுஷ் தரப்பில், 2015 ஆம் ஆண்டு நயன், நானும் ரவுடிதான் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையில் போட்ட போது தனுஷ் உண்டர்பார் நிறுவனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் இயங்கி வந்தது. படத்தினுடைய ஒரு பகுதி சென்னையில் தான் படமாக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உண்டர்பாருக்கு முழு உரிமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இப்படி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை தள்ளி வைத்திருக்கிறார்.






