நயன்தாராவின் அடுத்த பட இயக்குனர் – மீண்டும் ஒரு அறம்

0
529

தமிழ் சினிமாவில் டாப் 10 இயக்குனர்களில் ஒருவர் அறிவழகன். கடந்த 2009ஆம் ஆண்டு ஈரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் நல்ல ஹிட் ஆனது.

Manju

அதற்கு முன்னர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் அறிவழகன். ஈரம் படத்திற்கு பிறகு வல்லினம், ஆறாது சினம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கினார்.

தற்போது மலையாள நடிகை மஞ்சு வாரியரை வைத்து ஒரு படம் இயக்க தயாராகி இருந்தார். இந்த படம் அறம் படத்தினை போல ஒரு தனி ஹீரோயின் சப்ஜெட் ஆகும். தற்போது இந்த படத்தில் மஞ்சு வாரியருக்கு பதில் நயன்தாராவை கமிட் செய்துள்ளார்.

Nayanthar Actress

கதையை நயன்தாராவிடம் கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டார். படத்தினை பிவிஆர் சினிமாஸ் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அந்த நிறுவனம் தயாரிப்பில் இருந்து விலகியுள்ளதால் வேறு தயாரிப்பாளரை தேடி வருகிறார் நயன்.