தன்னுடைய காதல் மனைவிக்கு அழகான புகைப்படம் பதிவிட்டு விக்னேஷ் சிவன் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
நயன்தாரா நடிக்கும் படங்கள்:
இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று இருந்தார்கள்.
நயன்-விக்கி இரட்டை குழந்தை:
அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
நயன்தாராவின் 38 வது பிறந்தநாள்:
இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள். மேலும், அவர்கள் கொடுத்த ஆதாரங்கள் சரியாக இருந்ததால் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் தொடரவில்லை. தற்போது இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று நயன்தாராவின் 38 வது பிறந்தநாள். இது குறித்து விக்னேஷ் சிவன் அழகிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர், உங்களுடன் இது என்னுடைய ஒன்பதாவது பிறந்தநாள் நயன்.
விக்னேஷ் சிவனின் பதிவு:
ஒவ்வொரு பிறந்த நாளும் நீங்கள் சிறப்பாகவும், மறக்க முடியாததாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கிறீர்கள். ஆனால், கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு வாழ்க்கை தொடங்கி இருப்பதால் இது எல்லாவற்றிலும் மிகச் சிறப்பு வாய்ந்தது.அழகான ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் தாயாக நான் எப்போதும் உன்னை அறிந்திருக்கிறேன். உன்னை ஒரு சக்தி வாய்ந்த மனிதனாக பார்த்தேன். நீங்கள் எதை செய்தாலும் நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் செய்கிறீர்கள். இத்தனை வருடங்களில் நான் ஒரு வித்தியாசமான நபரை பார்த்தேன்.
மேக்கப் போடுவதை நிறுத்திய நயன் :
இன்று நான் உன்னை ஒரு தாயாக பார்க்கும்போது இதுவே உங்களின் மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம். நீங்கள் இப்போது முழுமையாகி விட்டீர்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.குழந்தைகள் உங்கள் முகத்தை முத்தமிடுவதால் இந்த நாட்களில் நீங்கள் மேக்கப் போடுவதில்லை.இத்தனை வருடங்களில் உன்னை விட அழகான ஒருவரை நான் பார்த்ததில்லை. உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை, மகிழ்ச்சியும் இனிமேலும் இருக்கும். நான் பிரார்த்திக்கிறேன்.
மை லேடி சூப்பர் ஸ்டார்
வாழ்க்கை அழகாக இருக்கிறது. திருப்தியாகவும் நன்றியுடன் இருக்கிறது. எங்களின் பிறந்த நாளெல்லாம் இதுபோல மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்.எங்கள் சிறிய குழந்தைகளுடன் நாம் அனைவரும் ஒன்றாக வளர்கிறோம். கடவுளின் ஆசிர்வாதத்துடனும், பிரபஞ்சத்தின் சாட்சியைத்துடனும் நமக்கான அற்புதமான வாழ்க்கை உருவாகிறோம். என் அன்பான பொண்டாட்டி, தங்கமே, என்றும் என் உயிர், உலகம் உன்னை நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். நயன்தாரா மை லேடி சூப்பர் ஸ்டார் என்று பதிவிட்டு இருக்கிறார்.