‘அவர்களுக்கு எல்லாம் Friendsன்ற வார்த்தைய யூஸ் பண்ண கூடாது’ – திரிஷா, ஷ்ரேயா, நமீதா என்று பல நடிகைகளுடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசிய நயன்.

0
744
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

-விளம்பரம்-

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். என்னதான் இவர் என்ட்ரி கொடுத்த போது பல டாப் நடிகைகள் இருந்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தத்தை இவர் மட்டுமே பெற்றார்.

இதையும் பாருங்க : இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், தங்கச்சிய பார்த்து இருக்கீங்களா? – வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

பிரம்மாண்டமாக நடந்த திருமணம் :

நயன்தாரா, அஜித்தை போல பொது பேட்டிகள் கொடுப்பது, படத்தின் விழாக்களில் கலந்து கொள்ளவது கிடையாது. ஆனால், தனக்கு கொடுக்கும் விருதுகளை மட்டும் நேரில் சென்று வாங்கிக்கொள்வார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமும் நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், இந்த திருமணத்தில் வேறு எந்த டாப் நடிகைகளும் கலந்துகொள்ளவில்லை.

மற்ற நடிகைகள் குறித்து நயன் :

அவ்வளவு ஏன் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த நயனுடன் இணைந்து நடித்த சமந்தா கூட பங்கேற்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தனக்கும் மற்றும் நடிகைகளுக்கும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்தார். அதில் நமீதா, குறித்து பேசிய போது :-

-விளம்பரம்-

நமிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனை :

பில்லா படத்தின் போது நாங்கள் கும்பலா ஒக்காந்து கொண்டு இருக்கும் போது அனைவருக்கும் ஹாய் சொல்வார். எனக்கு மட்டும் சொல்ல மாட்டார். நானும் அப்படியே விட்டுவிட்டேன். எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. மத்தவங்களுக்கு பிரச்னை என்றால் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று கூறியுள்ளார். அதே போல ஸ்ரேயா குறித்து பேசுகையில் ‘நாங்கள் நண்பர்கள் கிடையாது. அவருக்கெல்லாம் நண்பர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது’ என்று கூறியுள்ளார்.

திரிஷா குறித்து நயன் :

மேலும், திரிஷா குறித்து பேசுகையில் ‘எனக்கு நண்பரா இருந்தால் நானே போய் பேசுவேன். எனக்கும் திரிஷாவிற்கும் பிரச்சனை இருக்கிறது என்று பேப்பரில் எல்லாம் எழுதினார்கள். ஆனால், அந்த அளவிற்கு எல்லாம் பிரச்சனை கிடையாது. ஆனால், ரெண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காது. அவங்களுக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காது அவ்ளோ தான்’ என்று பேசியுள்ளார். இப்படி பல நடிகைகளுடன் பிரச்சனை இருப்பதால் தான் தன் திருமணத்திற்கு அழைக்கவில்லையோ என்னவோ.


Advertisement