இதுவரை எந்த நடிகையும் செய்யாத விஷயத்தை அஜித்துக்காக செய்த நயன்தாரா…? என்ன் செய்தார் தெரியுமா ?

0
1627
nayantharacute
nayantharacute

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். ஆனால், தல அஜித்தின் படம் என்றதும் கதை, சம்பளம் என்று எதை பற்றியும் விசாரிக்காமல் ஒப்புக் கொண்டாராம்.

nayan

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வரும் படம் ‘விசுவாசம்’ இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜித்துடன் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான். நடிகர் அஜித்துடன் நயன்தாரா ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து விட்டார். நடிகர் அஜித் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் அவர் ஒரு ஜெண்டில் மேன் என்று பல பேட்டிகளில் நயன்தாரா கூறியிருக்கிறார்.

பொதுவாக நடிகை நயன்தாரா படங்களில் நடிப்பதற்கு முன்னாள், அந்த படத்தின் கதையை கேட்ட பின்னர் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அதிலும் படத்தில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார். ஆனால் இயக்குனர் சிவா ‘விசுவாசம் ‘ படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகிய போது அஜித் படம் என்றவுடன் படத்தின் கதையை கூட கேட்காமல் ஓகே சொல்லி இருக்கிறார்.

nayanthara
nayanthara

இதை விட ஆச்சர்யமான விடயம் என்னவென்றால். தற்போது படங்களில் நடிக்க கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, விசுவாசம் படத்தில் நடிக்க சம்பளம் பற்றி கூட பேச வில்லையாம், அதுபோக அஜித் படத்தில் நடிபதற்காக தனது கால் ஷீட்களை கூட அட்ஜஸ்ட் செய்துள்ளாராம் நயன். இதனால் அஜித் மூலம் கதாநாயகியிடம் இருந்து இத்தனை சலுகைகளை பெற்றுள்ளார் இயக்குனர் சிவா. நடிகை நயன்தாரா அஜித் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது அஜித் ரசிகளிடையே நயன்தாராவிற்கு ஒரு சிறப்பு அங்கீகாரமே கிடைத்துள்ளது என்று கூறலாம்.