கோபம் குறைந்தால் தான் விஜய்யின் 62 படத்துக்கு ஜோடி ! பிரபல நடிகை ?

0
2864
vijay

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காதா, என பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கும் வேலையில் தற்போது விஜயுன் அடுத்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
vijayமெர்சல் படத்திற்கு அடுத்ததாக ரசிகர்களின் ஃபேவரட்டான விஜய்-முருகதாஸ் கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதம் துவங்கவுள்ளது. தற்போது படத்திற்க்காக குழுவை தேர்ந்தெடுத்து வருகிறார் முருகதாஸ். இந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப் போவதாகத் தெரிவிகிறது.

ஆனால், ஏற்கனவே கஜினி படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் முருகதாசுக்கும் நடிகை நயன்தாராவிற்கும் பிரச்சனை இருந்ததால், அதன் பின்னர் இருவரும் ஒரே படத்தில் இணையவில்லையாம்.
nayantharaதற்போது நயன்தாராவிடம் பேசி சம்மதிக்க வைத்தால் தளபதி விஜயுடன் நடிப்பார் எனத் தெரிகிறது. இதனால் இந்த ஜோடி சேர்ந்தால் இன்னும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என படத்தின் தரப்பு யோசித்து வருகிறது.