இதற்காக தினமும் 10 நிமிடம் செலவிடுங்க – மாணவர்களுக்கு நயன் கொடுத்த அட்வைஸ்

0
473
- Advertisement -

நடிகை நயன்தாரா கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-
nayanthara

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடந்து வாடகை தாயின் மூலம் 2 குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா. அதோடு இவர் நடித்த கனெட்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றிருந்தது.

கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா :

மேலும் தற்போது இவர் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படி பட்ட நிலையில் தான் நடிகை நயன்தாரான சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். மேலும் அந்த கல்லூரி இவரை பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்திருந்தது. இப்படிப்பட்ட நிலையில் அங்குள்ள மாணவர்கள் மத்தியில் நயன்தாரா பேசினார்.

-விளம்பரம்-

மாணவர்களுக்கு அறிவுரை ;

அவர் கூறியதாவது “கல்லூரியில் படிக்கும் போது மாணவர்கள் மகிச்சியாக இருக்கலாம். ஆனால் கல்லூரியில் நீங்கள் யாருடன் பாலகுகிறீர்கள் என்பதனை சரியாக தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் கல்லூரி வழக்கை மகிச்சியாக இருந்தாலும் இதில் எடுக்கும் முடிவு தான் உங்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும். கல்லூரியில் பயின்று வெற்றியேற்றாலும் நிதானமாகவும், பணிவாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நயன்தாரா.

மேலும் பேசிய நடிகை நயன்தாரா மாணவி, மாணவர்கள் அவ்ரக்ளுடைய பெற்றோர்களுக்கு தினமும் பத்து நிமிடத்தையாவது செலவழியுங்கள், அதில் தான் உங்களை பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறினார். இப்படி தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாரா மாணவர்களுக்கு கொடுத்த அறிவுரை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement