பேய்,பெண் சிசு கொலை நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் கதை இதுதானா.!

0
295
nayanthara

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் பெரும்பாலும் வெற்றியும் அடைகிறார்.

கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா என்ற இன்னொரு திகில் படத்திலும் நடித்து இருக்கிறார்.

இயக்குனர் சார்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரைலர்
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ‘மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா’ என்றதும் ‘என்னது மறுபடியுமா’ என்று ஒரு பெண் பதறுவதுபோல் பேசுகிறார். இதன் மூலம் இந்த படம் பெண் சிசு கொலை சம்மந்தபட்ட படமாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது.

ஒரு நயன்தாராவுக்காக இன்னொரு நயன்தாரா பழிவாங்குவது கதை என்று தெரிகிறது.நயன்தாரா மேக்கப் போடாமல் கருத்த முகத்தோடு வருகிறார். அவரது விழிகளில் கண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்னொரு நயன்தாரா மாடர்ன் உடையில் காட்சியளிக்கிறார். கருப்பு நயன்தாரா பேய் வேடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.