ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் காதலருடன் வந்து இறங்கிய நயன் – வைரலாகும் புகைப்படம்.

0
5380
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

-விளம்பரம்-

இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.

- Advertisement -

இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த விக்னேஷ் சிவன், இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம். அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

அந்த லவ் நல்லா இருக்கிறது. அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறியுள்ளார். இதுஒருபுரம் இருக்க நயன்தாராவிற்கு திருமண தோஷம் இருப்பதாக சொல்லி அவரை காளஹஸ்தி சென்று வழிபட சொல்லியிருக்கிறார் நயன்தாராவின் ஜோதிடர், அவரின் அறிவுரையின்படி இருவரும் அந்த கோவிலுக்குள் செல்வதற்கு லாக்டவுன் அறிவித்துவிட்டார்கள். எனவே லாக் டவுன் முடிந்ததும் அந்த கோவிலுக்கு சென்று ராகு பகவானை தரிசித்து விட்டு வந்த உடன் கூடிய விரைவில் நயன்தாராவின் திருமணம் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-
Advertisement