நான் இல்லாமல் இதை செய்ய உனக்கு அனுமதி இல்லை – விக்னேஷ் சிவனுக்கு நயன் எச்சரிக்கை.

0
2156
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த கனக்ட் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் , ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்தனர். ஆனால் , நீண்ட நாட்களாக தங்கள் குழந்தைகளின் முகத்தை காட்டாமல் இருந்து வந்தனர். இமேலும், நயன்தாரா இன்ஸ்டாகிராம் வலைத்தளத்திலும் இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் தான் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு நிலையில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி இருக்கிறார். அதில் முதல் பதிவாக தனது இரண்டு மகன்களான உயிர் உலக்கை கையில் ஏந்தி நடந்து வரும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் அதில் ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்று கேப்ஷனையும் குறிப்பிட்டு இருந்தார். நயந்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்ததில் இருந்தே அடிக்கடி தனது கணவருடன் கியூட் உரையாடல்களை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் மும்பை உணவகம் ஒன்றில் சாப்பிட்ட போது எடுத்த புகைப்படம் ஒன்றை ஸ்டோரியாக பதிவிட்டு இருந்தார். அதில் ‘நான் மும்பைக்கு வரும் போது எப்போதும் சாப்பிடும் மிகவும் பிடித்தமான உணவு. என் சில்லி பார்ட்னர் நயன்தாராவை மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவை தனது ஸ்டோரியில் பகிர்ந்துள்ள நயன்தாரா ‘ஆனால் நான் இல்லாமல் இதை செய்ய உனக்கு அனுமதியில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement