தனது வருங்கால கணவர் மற்றும் தாயுடன் ஓணம் கொண்டாடிய நயன் – விக்கி வெளியிட்ட புகைப்படங்கள்.

0
1466
nayanthara-vignesh
- Advertisement -

கொரோனா பிரச்சனையில் மக்கள் கொஞ்சம் அவதிப்பட்டு வந்தாலும் தங்களின் துயர் தீர்க்க தங்களை காண வரும் மகாபலிக்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை நாளில் அளிக்கும் வரவேற்பை இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வீட்டில் கோலம் போட்டு விளக்கேற்றி விருந்து படைத்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர் மலையாள மக்கள். மலையாள மக்களை தவிர மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான்.

-விளம்பரம்-

ஓணம் பண்டிகை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஓணம் புடவை தான். ஓணம் பண்டிகை வந்தாலே பல்வேறு பெண்களும் ஓணம் புடவையை கட்டிக்கொண்டு புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதிலும் நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும். இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல பிரபலங்களும் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், ஓணம் புடவையை கட்டிக்கொண்டு அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். அந்த வகையில் மலையாளியான நயன்தாரா, ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான கொச்சினுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்று இருந்தார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது வருங்கால மாமியார் மற்றும் வருங்கால மனைவி நயனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். மேலும், எப்போதும் எடுக்கும் அந்த ட்ரேட் மார்க் போஸில் நயனுடன் எடுத்துக்கொண்ட சில ரோமாண்டிக் போஸ்களை வெளியிட்டுள்ளார் விக்கி.

-விளம்பரம்-
Advertisement