சாமி கும்புடனமா , வாங்க உள்ள வாங்க – கருவறையில் இருந்து வெளியில் வந்து சத்தம் போட்ட நயன். வைரலாகும் வீடியோ.

0
463
nayan
- Advertisement -

நிம்மதியா சாமி கும்பிட விட மாட்டீங்களா! என்று கோவிலில் கோபப்பட்டு நயன்தாரா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

மேலும், நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல், O2, காட்ஃபாதர்,கோல்ட் படம் எல்லாம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து கடைசியாக நயன் நடிப்பில் வெளியான படம் கனெக்ட். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நயன் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். ஷாருக்கான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

- Advertisement -

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்:

இதுதான் நயன்தாராவின் முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை :

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். வாடகை தாய் மூலம் தான் இவர்கள் குழந்தை பெற்றார்கள் என்பது தெரிய வந்தது. மேலும், இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

குலதெய்வ கோவிலுக்கு சென்ற நயன்-விக்கி:

சமீபத்தில் தான் நயன் தங்களின் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்து இருக்கிறார்கள். இதில் ருத்ரோனில் என்பது சிவனை குறிக்கும் பெயர், தெய்வீக் என்றால் அதிர்ஷ்டம் அல்லது தெய்வீகம் என்றும் அர்த்தம். இந்த நிலையில் கோவிலில் நயன்தாரா கோபப்பட்டு பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேல்வளத்தூரில் இருக்கும் தங்களுடைய குலதெய்வ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள். இந்த கோவிலுக்கு திருமணத்திற்கு முன்பு இருவரும் வந்திருந்தார்கள்.

கோபத்தில் நயன் பேசியது:

திருமணத்திற்கு பிறகு தற்போது தான் இந்த கோயிலுக்கு வந்திருக்கிறார்கள். நயன்தாரா- விக்னேஷ் சிவன் வந்ததை அறிந்து ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சாமி கும்பிட்டும் கொண்டிருக்கும் போது வெளியில் இருந்த சிலர் தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். பின் விக்னேஷ் சிவன் சில நிமிடங்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டார். இதை கவனித்த நயன்தாரா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாதியில் வெளியில் வந்து உங்களுக்கு சாமி கும்பிடனுமா? வாங்க உள்ள வாங்க, சாமி கும்பிட தானே வந்திருக்ககோம். நாங்களும் தான் என்று கடுப்பாகி பேசிவிட்டு பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்றார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement