நித்யா மேனனை தொடர்ந்து ரசிகர்களிடம் நயன்தாரா நடந்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலம் லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் பல கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். இதனிடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் அழகான இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் நயன் பிசியாக நடித்து வருகிறார்.
நயன் பற்றிய தகவல்:
இப்படி நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் முதலில் அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார். தீ லிப் பாம் கம்பெனி என்று தன்னுடைய நிறுவனத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் தான் துவங்கினார். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதை அடுத்து கடந்த ஆண்டு 9ஸ்கின் என்ற சரும பாராரிப்பு தயாரிப்புகளை நயன் அறிமுகப்படுத்திருந்தார்.
தொழிலதிபர் நயன்தாரா:
இது சருமத்திற்கான கிரீம், சீரம், ஆயில் போன்ற பொருட்களை வழங்குகிறது. இதனை அடுத்து ‘Femi 9’ என்ற நாப்கின் தயாரிப்பை நயன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த தயாரிப்பும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து கடந்த ஆண்டு இவர் டிக்கெட் 9 என்ற ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தார். இப்படி நயன்தாரா சினிமா, பிசினஸ் என்று கலக்கி கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் femi 9 என்ற பிசினஸ் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து மதுரையில் விழா நடத்தி இருக்கிறார்கள். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள், விக்னேஷ், நயன் மாமியார் எல்லாம் கலந்திருந்தார்கள்.
நயன்தாரா செய்த வேலை:
இந்த விழாவிற்கு நயன்தாராவை பார்க்க ரசிகர்களின் கூட்டம் திரண்டு இருந்தார்கள். ரசிகர்கள் கை நீட்டும் போது நயன் அவர்களுக்கு கை கொடுக்காமல் கும்பிட்டு அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். அதற்குப்பின் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தன்னுடைய மாமியாருக்கு மட்டும் கை கொடுத்து நயன்தாரா பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. இதே மாதிரி சமீபத்தில் காதலிக்க நேரமில்லை பட விழாவில் நித்யா மேனனுக்கு ரசிகர் கை கொடுத்திருந்தார்.
நித்யா மேனன் செய்த செயல்:
உடனே நித்யா மேனன், ‘எனக்கு உடம்பு சரியில்லை, அப்புறம் உங்களுக்கும் கோவிட் ஏதாச்சும் வந்துரும்’ என்று கூறி அவரை நிராகரித்து இருந்தார். அதற்கு முன்பு நித்யா மேனன், மிஸ்கின் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தார். பதிலுக்கு மிஸ்கினும் நித்யா மேனனுக்கு கையில் முத்தமிட்டு இருந்தார். அதற்குப் பிறகு, அங்கிருந்த ஜெயம் ரவியையும் நித்யா மேனன் ஹக் செய்து இருந்தார். இதை தான் நெட்டிசன்கள் கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.