நயன்தாராவால் குழந்தை பெற்று கொள்ள முடியாது, அதுக்கு காரணம் இதான் – பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை வீடியோ

0
952
bayilwan
- Advertisement -

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன், சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். மேலும், இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போடுவது என்று காதல் புறாக்களாகவே இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
nayanthara

அதோடு இவர்களைப் பற்றி ஏதாவது ஒரு நியூஸ் கிடைத்தால் போதும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரென்டிங் ஆகிவிடுவார்கள். மேலும், நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம் அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை.

- Advertisement -

நயன்-விக்னேஷ் பற்றிய தகவல்:

ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார். பிறகு நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் பல படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்கள் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றனர். அப்போது நயன்தாரா திருமணம் ஆனவர் போல் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார். இதனால் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று சிலரும் புரளியை கிளப்பி இருந்தார்கள். இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுதி இருந்தது.

nayan

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம்:

வேறு சிலரோ விக்னேஷ் மற்றும் நயன்தாராவுக்கு நிச்சயம் முடிந்தது போல் திருமணமும் ரகசியமாக செய்து கொண்டார்களா என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது நயன்தாராவை பற்றி ஒரு தகவல் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது. சமீபத்தில் தான் பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்கள்.

-விளம்பரம்-

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று எடுக்கும் நயன்:

அதே வழியில் தான் தற்போது நயன்தாரா பின்பற்றி குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருமே தங்களுடைய வாழ்க்கை குறித்து எந்த திட்டங்களையும் பொதுவெளியில் பேசியதே இல்லை. இதனை தொடர்ந்து இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் கடுமையாக தன்னுடைய சேனலில் விமர்சித்துப் பேசி இருக்கிறார். அதில் அவர், நயன்தாராவுக்கு வயதாகிவிட்டது. இனிமேல் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதோடு நயனுக்கு பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இவர் குழந்தை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த மாட்டார்.

நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியது:

அதனால் தான் நயன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கிறார் என்று நயன்தாரா குறித்து மோசமாக விமர்சித்துப் பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இப்படி பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்து ஆபாசமாக, மோசமான வார்த்தைகளால் பேசி இருப்பதால் பயில்வான் ரங்கநாதன் மீது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்கள். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவை குறித்து பேசி இருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Advertisement