ஜூன் 9ல் கல்யாணம் இன்று அக்டோபர் 9ல் Twins. 4 மாதத்தில் தாயான நயன் – விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள்.

0
343
nayan
- Advertisement -

திருமணம் ஆகி இன்றுடன் சரியாக நான்கு மாதங்களே ஆன நிலையில் தங்களுக்கு twins குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திடுள்ளது. பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர்.

- Advertisement -

Twins குழந்தைக்கு தாயான விக்கி நயன் :

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக பாடிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘எங்களின் அனைத்து பிரார்த்தனைகளும் முன்னோர்களின் ஆசிர்வாதங்களும் ஒன்றாக சேர்ந்து இரண்டு குழந்தை வடிவமாக எங்களுக்கு இரண்டு குழந்தையாக வந்து இருக்கிறது. எங்களுடைய உயிர் மற்றும் உலகத்திற்கு உங்களின் வாழ்த்துக்களை நாடுகிறோம்முன்னோர்களின்’ என்று பதிவிடுள்ளார்.

4 மாதத்தில் குழந்தை :

விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் ஒரு சிலர் கல்யாணம் முடிந்து சரியாக இன்றுடன் 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார் என்று கேள்வி எழுப்பி வர்கின்றனர். அதே போல நயந்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர்கள் தரப்பில் இருந்து அறிவித்தாலே தெரியும்.

-விளம்பரம்-

‘Surrogacy’ மூலம் பெற்றாரா :

பொதுவாக இந்த ‘Surrogacy’ பாலிவுட் துறையில் தான் மிகவும் அதிகம். பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி சிந்தா போன்றவர்கள் இந்த ‘Surrogacy’ முறைப்படி தான் குழந்தை பெற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருமே 40 வயதை கடந்த பின்னரே இந்த முடிவை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சமீபத்தில் கூட பிரியங்கா சோப்ரா கூட ‘Surrogacy’ முறைப்படி குழந்தைக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயனின் 100 பட டார்கெட் ?

ஆனால், 37 வயதாகும் நயன்தாராவின் இந்த முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வி . ஏற்கனவே நடிகை நயன்தாரா 100 படங்களில் நடித்த பின்னர் தான் தனது திருமணத்தை செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது நயன்தாரா 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இன்னும் 3 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்தால் கூட 40 வயதை அவர் நிச்சயம் நெருங்கிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement