எனக்கு கொரோனாவா ? நயன்தாரா விளக்கம் – விக்னேஷ் சிவன் கூட இதை தான் செய்கிறாராம்.

0
6727
Vignesh-Shivan

தமிழ் திரைப்பட உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தற்போது நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவே பொறாமை படும் காதல் ஜோடியாக இருந்து வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இவர்களுடைய காதல் படர ஆரம்பித்தது. பிறகு தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் தம்பதிகள் இருந்து வந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான்.

nayanthara-vignesh

இவர்கள் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் எதிர் பார்த்து கொண்டு இருகின்றனர். இந்நிலையில் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த ஊரடங்கால் நயன்தாரா, விக்கி பற்றி எந்த அப்டேட்டும் கிடைக்காததால் ரசிகர்கள் அவர்களது பழைய போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.தற்போது நடிகை நயன்தாராவுக்கும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.இந்த நிலையில் தங்களுக்கு எந்த கொரோனா தொற்றும் இல்லை எனவும், தாங்கள் நலமுடன் இருப்பதாகவும் நயனின் காதலி விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

அதே போல கடைசியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா ஆரம்பம் முதலே தன்னுடைய பாதுகாப்புக்காவும், பிறருடைய பாதுகாப்பையும் கருதி தனி மனித விலகலை கடைபிடித்து வருகிறார் என்று நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு தெரிவித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement