திருமணத்திற்குப் பின்னர் நடிப்பது குறித்து நயன்தாரா போட்டிருக்கும் கண்டிஷன் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகையை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் O2.
நயன் நடிக்கும் படங்கள்:
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி கே விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், காட் ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் காதல்:
இப்படி பல படங்களில் நயன் கமிட்டாகி இருந்தாலும் தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று கொண்டு இருந்தார். அதோடு தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருந்தார்கள். இதனால் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயமாக இருந்தது. பின் இவர்களின் திருமண விழா மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது.
நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்:
பின் அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களுடைய இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். கடந்த வாரம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்து வருவது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்றிருக்கின்றார்கள்.
நயன்தாரா போட்ட கண்டிஷன்:
இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு செல்ல தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜூலை மாதத்தில் பட வேலைகள் மீண்டும் தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா அவர்கள் திருமணத்திற்கு பிறகு படத்தில் எந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இரண்டு கண்டிஷன்கள் போட்டிருக்கிறார். அதாவது, படத்தில் கதாநாயகன் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன். படத்திற்கு தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.