தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.
இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். சமீபத்தில் கூட பிரபல செய்தி வலைதளத்தில் வெளியான தகவலின்படி, நயன்தாரா தனது சினிமா வாழ்வில் அடையப்போகும் உச்சத்தை ஜோதிடர் ஒருவர் கணித்து கூற அது அப்படியே நடந்து விட்டதால், அந்த ஜோதிடரை நடிகை நயன்தாரா பெரிதும் நம்புகிறாராம், அவர் சொன்னதால் தான் கடந்த ஆண்டிலிருந்தே நயன்தாரா விக்கியை ஜோடிகள் அடிக்கடி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்களாம். மேலும் அந்த ஜோதிடர் நயன்தாராவிற்கு திருமண தோஷம் இருப்பதாக சொல்லி அவரை காளஹஸ்தி சென்று வழிபட சொல்லியிருக்கிறார்.
மேலும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட சொல்லி இருக்கிறார் அந்த ஜோதிடர். ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டி பிரார்த்திக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்ததும் நயன்தாராவின் திருமணத்தடை முற்றிலும் விலகிவிடும் என்று அந்த ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், நயன்தாரா தேசிய விருது பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் தங்களது திருமணம் குறித்து பேசிய விக்னேஷ் சிவன், இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம். அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அந்த லவ் நல்லா இருக்கிறது. அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறியுள்ளார்.