தனுஷை தொடர்ந்து நயன்தாராவின் ஆவண படத்தின் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக தனுஷ்-நயன்தாரா இடையேயான சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நயன், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது.

இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள். மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
நயன் – தனுஷ் சர்ச்சை :
இதன் காரணமாக தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது. அதனால், நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், ‘என்னுடைய ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் என்னும் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களை ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

தனுஷ் தொடர்ந்த வழக்கு :
அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே , நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தும் தனுஷ் NOC தரவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து, தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதனால், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் அவர்களின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் Netflix நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டது. பின் இந்த வழக்கு நிலுவலையில் இருக்கிறது.
சந்திரமுகி காட்சி சர்ச்சை:
இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவின் ஆவண படத்திற்கு எதிராக மீண்டும் வழக்கு தொடர்ந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நயன்தாராவின் ஆவண படத்தில் அனுமதியே வாங்காமல் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்திருப்பதால் படத்தினுடைய பதிப்புரிமை வாங்கிய ஏபி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=kOoWgy71K2I
நீதிபதி உத்தரவு:
அந்த மனுவில், நயன்தாராவின் ஆவணப் படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இருந்தாலுமே, அவர்கள் அந்த காட்சியை பயன்படுத்தி தான் வருகிறார்கள். ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஆவணப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். அதோடு ஆவணப்படத்தின் மூலம் சம்பாதித்த லாபகணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வாரங்களில் இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி டார்க் ஸ்டுடியோவிற்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டிருக்கிறது.






