5 ஸ்டார் ஹோட்டல் கூட இல்ல, இந்த தகரம் போட்ட கடை பிரியாணி தான் நயனின் பேவரைட்டாமே.

0
2078
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நயன் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

- Advertisement -

அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன்.இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒட்டு மொத்த படக்குழுவும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாராவிற்கு சென்னையில் ஒரு ஒரு பிரபல ஹோட்டலின் பிரியாணி மிகவும் பிரியம் என்று அந்த ஹோட்டலில் முதலாளி கூறியுள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள அசீம் பிரியாணி கடை தான் அந்த ஹோட்டல். வெறும் தகரம் அமைத்து கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஹோட்டலில் இருந்து நயன்தாரா உட்பட பல நடிகர்களுக்கு சாப்பாடு சென்று இருக்கிறாதாம்.

-விளம்பரம்-
Advertisement