விருது விழாக்கு வரும் நயன் ப்ரோமோஷனுக்கு ஏன் வருவதில்லை – அவரே சொன்ன நச் பதில் (அதான் லேடி சூப்பர் ஸ்டார்)

0
4118
Nayantara
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் பொது நிகழ்ச்சிகளிலும் தனது படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதை எப்போதும் நிறுத்திவிட்டார் தற்போது நடிகைகளில் நயன்தாரா அதே ரூட்டை பின்பற்றி வருகிறார்.தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகைகளில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அதிக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் நயன்தாரா தான் முதல் இடம்.

-விளம்பரம்-

நடிகை நயன்தாரா டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாமல் லீடு ரோல்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் லீடு ரோலில் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அஜித்தை போல நயன்தாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சகளில் கலந்துகொள்வது இல்லை என்றாலும் விருது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்வார்.

- Advertisement -

நயன்தாரா அக்ரீமென்ட் போடும் போதே என்னுடைய ப்ரைவேசி மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டுவிடுவார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நயன்தாரா. இந்த படம் சொந்த படம் என்பதால் தான் நயன்தாரா ப்ரோமோஷன் செய்கிறார் என்று விமர்சனம் கூட எழுந்தது.

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த டிடி, நயன்தாராவிடம் ‘ஏன் ப்ரோமோஷன் ஆடியோ லான்ச் இதில் எல்லாம் கலந்துகொள்வது இல்லை’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நயன், நான் பெரும்பாலும் எல்லா ப்ரோமோஷனிலும் கலந்துகொள்வேன். ஆனால், ஆடியோ லான்ச்களில் கலந்துகொள்வது கிடையாது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே என் படத்தை பற்றி நானே பேசுவது எனக்கு இயல்பாகவே வரவே வராது. அப்படி என் படத்தை பற்றி நானே பேசினால் அது செயற்கையாக இருக்கும். என் படம் நல்லா இருக்கும், எல்லாரும் போய் பாருங்கனு நான் எப்படி சொல்ல முடியும், அதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். எல்லாத்துக்கும் மேல நாம பேச கூடாது நம்ம படம் தான் பேசனும் என்று கூறியுள்ளார்.

Advertisement