இந்தியாவின் உலக அழகி என்ற பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடம் வெளியில் வந்த போது அவர்களை பத்திரிகையாளர் வளைத்து வளைத்து படம் எடுத்தனர்.
இதையும் பாருங்க : ‘என்ன ஏமாத்திட்டான் ‘ நான்கு வருடங்கள் காதலித்த தன் காதலர் மீது போலீசில் புகார் அளித்த ஜூலி
அப்போது ஆராத்யா, ஒரு மாடல் அழகியை போல கேட் வாக்கில் நடந்து வந்தார். தன்னுடைய மகனின் இந்த செயலை பார்த்து உடனே கொஞ்சம் கடுப்பான ஐஸ்வர்யா ராய் அவரை ஒரு கணம் கோபமாக பார்த்து அவரின் கையை குலுக்கி, அவரின் நடையை மாற்றினார். ஐஸ்வர்யா ராய் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஐஸ்வர்யாராயின் மகளை கேலி செய்து வருகிறார்கள்
இந்த நிலையில் கடந்த மாதம் ஆராத்யாவின் 10-வது பிறந்த நாளை முன்னிட்டு மாலத்தீவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அபிஷேக் பச்சன், அங்கு தனது மகளின் பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதிலும் சில நெட்டிசன்களில் சிலர் ஆராத்யாவைப் பற்றியும், அபிஷேக் பச்சன் குடும்பத்தைப் பற்றியும் கேலி செய்திருந்தனர்.
சமீபத்தில் ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த அபிஷேக் பச்சன் இதுகுறித்த கேள்வி பதில் அளித்த போது ”ஆராத்யாவை கேலி செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒரு பிரபலமாக நான் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேரே அதைச் செய்து பார்க்கட்டும்’ என்று காட்டமாக பதிலளித்துள்ளார்