விக்னேஷ் சிவன் குறித்து மனம் திறந்து நடிகை நயன்தாரா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடித்த ஜவான் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதை அடுத்து கடைசியாக நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
நயன்தரா குடும்பம்:
அதன் பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நயன்தாரா நடித்து வருகிறார். நயன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, நயன் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்.

நயன் சர்ச்சை:
சமீபத்தில் தான் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ தொடர்பான ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்தது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன் குறித்து நயன் கூறியிருந்தது, நாங்கள் இருவரும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில நேரங்களில் நான் நினைத்திருந்தேன். நான் இப்போதும் குற்ற உணர்வோடு தான் இருக்கிறேன். காரணம், நான் தான் அவரை இந்த உறவுக்குள் இழுத்தேன்.

நயன் பேட்டி:
நான் அவருடைய வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென தனியாக ஒரு பெயர் கிடைத்திருக்கும். இயக்குனர், பாடல் ஆசிரியர், எழுத்தாளர் என எல்லா துறையிலும் அவருக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கும். விக்கி ரொம்ப நல்ல மனிதர். அவரைப்போல யாராவது இருக்க முடியுமா? என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ஒருவர் மீது உள்ள அன்பும், மரியாதையும் அவர்கள் சந்திக்கும் நெகட்டிவ்வான விஷயங்களால் காணாமல் போய்விடுகிறது. தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் குறித்து சொன்னது:
நாங்கள் வெற்றியோ, ஆடம்பரத்தையோ, செல்வாக்கையோ யோசித்து நாங்கள் திருமணம் செய்யவில்லை. அன்பு மட்டும் தான் எங்களுடைய உறவிற்கு அடையாளம். என்னை விட லேட்டாக தான் விக்கி இந்த கேரியரை தொடங்கினார். அதனால் தான் அவரைப் பற்றி நிறைய ட்ரோல்கள் வருகிறது. நான் ஏற்கனவே சக்ஸஸ்ஃபுல் ஆக இருப்பதால் என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே கிடையாது என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.






