கடந்த சில நாட்களாகவே நயன்தாரா மற்றும் ராதாரவி பிரச்சனை தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றிய சரியான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொலையுதிர் காலம் படம் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே உளறிக்கொட்டினர் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவால் தற்போது கொலையுதிர் காலம் படக்குழுவிற்கு மிகப்பெரிய தலைவலி வந்துள்ளது. அது என்னவெனில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் கைவிடப்பட்ட படம் என்று குறிப்பிட்டதால், இந்த படத்தை ட்ரைலர் வெளியீட்டிற்கு முன்னதாக வாங்கி கொள்கிறேன் என்று கூறிய பலரும் தற்போது கைவிடபட்ட படத்தை எப்படி வாங்குவது என்று யோசித்து வருகின்றனர்.
இதனிடையே, ‘கொலையுதிர் காலம்’ என்ற பெயர் ‘தன்னுடைய நாவலின் தலைப்பு’ என்று சொல்லி, எழுத்தாளர் சுஜாதாவின் சார்பாக படத்தின் ரிலீஸுக்கு தடைகேட்டு வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது , தயாரிப்பாளர் ரிலீஸ் பரபரப்பில் தவிக்கும்போது பணம் கேட்டால் கொடுத்துவிடுவார் என்று திட்டமிட்டுச் செய்கின்றனர். எனக்கு மட்டுமல்ல நிறையத் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற அநியாயச் செயலை அனுபவித்துவருகின்றனர்.
இதுவரை 12 -கோடி ரூபாய் செலவு செய்து ரிலீஸாக ரிஸ்க் எடுத்த கொண்டிருக்கும்போது, வெறும் 10,000 ரூபாய் செலவுசெய்து தடை வாங்குவதா? தயாரிப்பாளர் பயந்துகொண்டு சில லட்சங்கள் கேட்டால் கொடுத்துவிடுவார் என்று தவறாகத் திட்டமிட்டு, ஒரு கூட்டம் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.