நயனுடன் திருமணம் குறித்து ஹிண்ட் கொடுத்த விக்கி – எப்போது திருமணம் என்று கேட்கும் ரசிகர்கள்.

0
2453
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

-விளம்பரம்-

இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.

- Advertisement -

சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. அனால், தற்போதும் இவர்கள் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னையர் தினமான நேற்று (மே 10) விக்னேஷ் சிவன் தனது டிக் டாக் பக்கத்தில் நயன்தாராவின் சில அறிய புகைப்படங்களை பதிவிட்டார்.

மேலும், நயன்தாரா கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட விக்னேஷ் சிவன் ‘எனது குழந்தையின் வருங்களா தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் நயனை திருமணம் செய்வது உறுதி என்பதை ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement