தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா ஆரம்பத்தில் இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

0
980
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

-விளம்பரம்-

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில் சென்று இருந்தார்.

- Advertisement -

ஆனால், நடிகை நயன்தாரா, ஐயா படத்திற்காக எப்படி வந்தார் என்பது தான் ஸ்வாரஸ்யமான விஷயம். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின்போது இயக்குனர் ஹரி ஒரு குடும்ப பாங்கான முகத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் பிஆர்ஓ ஜான்சனிடம் கதாநாயகி தேர்வு குறித்து கூறி இருக்கிறார். அப்போது ஜான்சன் அவருடைய கேரளாவைச் சேர்ந்த நண்பர் அஜய் என்பவரிடம் கூறியிருக்கிறார். கேரள பத்திரிகை ஒன்றில் நிருபராக வேலை செய்த அஜய் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த நயன்தாராவின் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதன்பின்னர்தான் நயன்தாராவிற்கு ஐயா படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக மும்பையில் பெங்களூரில் இருந்து வரும் நடிகைகளை தயாரிப்பு நிறுவனங்கள் விமான டிக்கெட்டை போட்டுதான் வரவேற்பார்கள். ஆனால் நடிகை நயன்தாரா தனது அம்மா மற்றும் அப்பா உடன் அரசு பேருந்தில் கேரளாவில் இருந்து கோயம்பேடுக்கு வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா முதன் முதலில் நடித்த விளம்பர படத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement