விஜய், அஜித் மட்டும் தான் வசூல் கிங்கா. தென்னிந்திய லெவலில் நயன்தாரா படைத்த சாதனை.

0
1102
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதேபோல இவர் லீடு ரோலில் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-

இதனால் வருடத்திற்கு ஒரு படமாவது லீடு ரோலில் நடித்து விடுகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படம் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியான போதிலும் இந்த படம் பட்ஜெட்டை மீறி வசூலை குவித்து உள்ளது. இந்த படம் 13 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த நிலையில் இதுவரை 27 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

மேலும், இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே டிஜிட்டல் ரயிட்ஸ் மற்றும் OTT உரிமம் மூலம் 10 கோடி லாபத்தை பெற்றுக் கொடுத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மூக்குத்தி அம்மன் படத்தின் வசூல் மூலம் தென்னிந்திய சினிமாவில் லீட் ரோலில் நடித்த நடிகைகளில் நயன்தாராவின் படம் தான் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement