நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் இந்த கொரியன் படத்தின் காப்பியா.!

0
1524
nayan
- Advertisement -

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய நடிகைகளில் கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். மேலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பார்கள். நயன்தாரா, இளையதளபதி விஜயின் “பிகில்” படத்தில் நடித்தும் , அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்திலும் நடித்து உள்ளார். தமிழ்மொழியில் மட்டும் இல்லாமல் இவர் மலையாளத்தில் நிவின் பாலி உடன்’ லவ் ஆக்ஷன் ட்ராமா’ படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் சாயிரா நரசிம ரெடி படத்திலும் நடித்து வருகிறார்.இப்படி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழியில் கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா அவர்கள் தற்போது புதிதாக ஒரு ‘திரில்லர்’ படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி கொண்டு வருகிறது.

-விளம்பரம்-
Image result for netrikan movie first look

மேலும் ‘அவள்’ பேய் படத்தின் இயக்குனர் மிலந்த் ராவ் அவர்கள் நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளார் என்றும் கூறியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து நயன்தாராவின் இந்த புது படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளார்.மேலும் இந்த படத்தின் மூலம் இருவரும் இணைய போறாங்க என்ற செய்தி இணையங்களில் வெளியாகி உள்ளது.மேலும் இந்த படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தி நடித்த நெற்றிக்கண் படத்தின் டைட்டிலை வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

- Advertisement -

இதையும் பாருங்க : நேற்று நடந்து முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க் முடிவில் முதல் மற்றும் இறுதி இடத்தில் இருப்பது யார் தெரியுமா.!

மேலும், இவர் நடிக்க உள்ள புது படத்தில் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இயக்கப்போவதாக இயக்குனர் கூறியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தின் முதலிலும் தொடங்கலாம் என்று எதிர்பார்த்தப்படி விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “நெற்றிக்கண்” படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்நிலையில் படத்திற்கான பூஜைகளும், படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

-விளம்பரம்-
Image result for blind korean movie

இதனால் ரசிகர்களிடையே நயன்தாராவின் அடுத்த படம் தயாராகி விட்டது என்று உற்சாகத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நெற்றிக்கண் படத்தை குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் ஒரு ரீமேக் படம் என்று கூறினார்கள். மேலும் ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக்தான் நெற்றிக்கண் என்று தகவல் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா கண்தெரியாத உயர்ந்த காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்றும், அவருடன் பல முக்கிய கதாபாத்திரங்களில் பல நடிகர்கள் நடித்துள்ளனர் என்று படக்குழு கூறியுள்ளது. இந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று அதிக எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நயன்தாராவின் கடைசி படமான கொலையுதிர் காலம் திரைப்படமும் ஹாலிவுட்டில் வெளியான ‘hush’ என்ற படத்தின் ரீ-மேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல கோலமாவு கோகிலா படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement