விசாரித்து பின்னர் செய்தியை போடுங்க – நயன்தாரா குறித்து வெளியான லேட்டஸ்ட் வதந்திக்கு நயன்தாரா தரப்பு விளக்கம்.

0
564
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதேபோல இவர் லீடு ரோலில் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-
 nayanthara

இதனால் வருடத்திற்கு ஒரு படமாவது லீடு ரோலில் நடித்து விடுகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை நயன்தாரா தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார் சிம்பு, பிரபுதேவா காதல் துவங்கி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் நயன். இருப்பினும் தற்போதும் லேடி சூப்பர் ஸ்டாராக தான் இருந்து வருகிறார். ஒரு பக்கம் லீட் ஹீரோக்களுடன் நடித்தாலும் மறுபக்கம் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. வரலாற்றில் இடம் பிடித்த ஆளுமைகளில் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் ட்ரெண்ட் சமீபகாலமாக இந்திய சினிமாவில் அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சுதந்திர போராட்ட வீராங்கனையான சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை சுசிகணேசன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் இந்த படம் பற்றிய விளக்கத்தை நயன்தாரா தரப்பினர் வெளியிட்டுள்ளனர். அதில், ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று ஊடகங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன. நயன்தாரா அப்படத்தில் திட்டவட்டமாக நடிக்கவில்லை. அவரது கருத்தை நாங்கள் இந்த அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு பகிர்கிறோம். இது ஒரு ஆதாரமற்ற வதந்தி. ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement