தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளை கமிட் செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முதல் முன்னுரிமையாக இருப்பது நடிகை நயன்தாராவின் பெயர் தான்.
அதற்கேற்றார் போல நயன்தாரா நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்தான் என்ற எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
அவ்வாறு வெளியான படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். இதுவரை சினிமாவில் கலக்கி வந்த நயன் தற்போது சின்னத்திரைக்கு வருகிறாராம்.
கலர்ஸ் தொலைக்காட்சி நயன்தாரா கலர்ஸ்ஸுக்கு வருகிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்த்துள்ளது. ஆனால். இவர் சிறப்பு விருந்தினராக வருகிறாரா இல்லை எதாவது தொடரில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாரா என்று தான் தெரியவில்லை.