‘நான் எதுக்கு பயப்படணும், பப்லிசிட்டிக்காக பண்ணானே’ – மீண்டும் தனுஷ் பஞ்சாயத்தை கிளறிய நயன்தாரா

0
171
- Advertisement -

மீண்டும் தனுஷ் பஞ்சாயத்து குறித்து நயன்தாரா பேட்டியில் பேசியிருக்கும் விஷயம்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இவர்கள் திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond The Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதனால், நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று இணையத்தில் வெளியிட்டிருந்தார். அது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

வழக்கு தொடர்ந்த தனுஷ்:

ஆனால், தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் இடம் பெற்றன. அதனால் நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஒரு சிலர் நயன்தாரா விளம்பரத்துக்காக தான் ஆவணப்படம் வெளியாக்கும் சில நாட்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளியிட்டார் என விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாரா, ‘என்னுடைய விளம்பரத்துக்காக மற்றொருவரின் இமேஜை கெடுக்கிற ஆள் நான் கிடையாது.’

நயன்தாரா பேட்டி:

மேலும், எங்களுக்கு பெரும் அளவில் ஆதரவு இருந்தது. ஆனால் அவரின் ரசிகர்களாக, நலம் விரும்பிகளாக நிறைய பேர் இருக்கின்றனர். அது நல்லது தான். ஆனால், நாங்கள் பிஆர் ஸ்டண்ட் செய்கிறோம் என்று எப்படி சொல்லலாம். அது எங்கள் நோக்கமே கிடையாது. எங்கள் ஆவண படத்தை ஒரு திரைப்படமாக பார்க்க வேண்டியதில்லை. உங்களுக்கு ஒரு நபரைப் பிடித்தால் அந்த நபர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் அதை பார்த்தீர்கள். இதில் ஹிட், ஃப்ளாப் என்றெல்லாம் கிடையாது.

-விளம்பரம்-

தனுஷை தொடர்பு கொள்ள முடியவில்லை:

அதோடு நான் பொதுவெளியில் பேசியதால்தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு முன் நான் தனிப்பட்ட முறையில் அவரை தொடர்பு கொண்டு உண்மையாகவே ஏன், என்ன பிரச்சனை என்று நேரடியாக பதில் பெற விரும்பினேன். எனது கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷின் மேலாளருக்கு தொடர்பு கொண்டு பிரச்சனையை சரி செய்ய முயன்ற போது தனுஷை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், பொது நண்பர்கள் மூலமாகவும் நாங்கள் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவர் பேச முன்வரவில்லை. ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதும் அதில் எங்கள் மொபைலில் எடுக்கப்பட்டு காட்சிகள் தான் இடம் பெற்றிருந்தன. ஆனால், மக்கள் அதை புரிந்து கொள்ளாமல் தனுஷின் உரிமை என்று கூறினார்கள்.

அது ஒரு விஷயமே இல்லை:

மேலும், நாங்கள் படத்தின் காட்சியை கேட்கவில்லை. பிடிஎஸ் காட்சிகள் இப்போதுதான் பட ஒப்பந்தத்தின் பகுதியாகி இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தற்செயலாக செல்போன்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்படி எடுக்கப்பட்டதே இந்த வீடியோக்கள். இதைத்தான் நாங்கள் பயன்படுத்தினோம். ஆனால், அவரும் அவரது ஆட்களும் பல பிரச்சனைகள் உருவாக்கினார்கள். அவர் மீது எங்களுக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. ஆனால், இந்த விவாகரத்தில் நடந்தவை நியாயமற்றதாக இருந்ததால்தான் நான் பொதுவெளியில் பேசினேன் என்று நயன் கூறியுள்ளார்.

Advertisement