கலைஞரின் மறைவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.? அவரே வெளியிட்ட காரணம்.!

0
321

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் நேற்று காலமானதை அடுத்து இன்று மாலை அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் , திரையுலக பிரபலங்களும் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்றனர். ஆனால், தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் நயன்தாரா, கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்காததற்கு பத்திரிகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

kalainjar

தற்போது நயன்தாரா,அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்திலும், தெலுங்கில் மூன்று மொழிகளில் தயராகி வரும் ‘செய் ரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது வெளியூரில் படப்பிடிப்பு நடந்து வருவதால் தம்மால் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் பங்குபெற முடியவில்லனு என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் நயன்தாரா தெரிவித்துள்ளது ‘மிகவும் இருள் சூழ்ந்த 24 மணி நேர அனுபவத்தை அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். நமது சூரியகதிரின் ஒளியை நாம் இழந்துவிட்டோம். ஒரு ஒப்பற்ற எழுத்தாளர்,பேச்சாளர், சிறந்த தலைவர், நமது மாநிலத்தின் ஒரு முகவரியாக இருந்து வந்தவரை நாம் இழந்து விட்டோம்.

தமிழர்களில் குரலாய் இருந்து 75 ஆண்டுகளாக தலைப்பு செய்தியாக இருந்தவர், அவர் செய்த சாதனைகள் மிகவும் நம்பமுடியாதவை. அவரின் ஆட்சி திறமையும், தமிழகத்தை ஆண்ட விதத்தையும் கண்டு நாம் பல முறை வியந்து இருக்கிறோம். உயரிய மரியாதையுடன், ஆழ்ந்த இறங்களுடன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், கழக தொண்டர்களுக்கும், மற்றும் மக்களுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.- நயன்தாரா’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.