தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.
இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.
சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது. அனால், தற்போதும் இவர்கள் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னையர் தினமான இன்று (மே 10) விக்னேஷ் சிவன் தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நயன்தாரா, தனது தாயுடன்சிறு வயது முதல் தற்போது வரை இருக்கும் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்தை கூறி உள்ளார். மீ;மேலும், மற்றொரு வீடியோவில் இதே போல தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து தனது தாய்க்கும் அன்னையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.