ஷாருக் கான் பட வாய்ப்பை நிராகரித்த நயன். காரணம் பிரபுதேவா தான்.

0
812
nayan
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் புகைந்து வருகின்றனர்.தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்துள்ளார் நயன்தாரா.

-விளம்பரம்-
Prabhudeva: Producer says Nayanthara and Prabhudeva coming ...

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்த விஷயம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆரம்பத்தில் சிம்புவை காதலித்து வந்த நயன்தாரா பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து விட்டார். அதன் பின்னர் திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வந்தார். இதனால் பிரபுதேவாவின் குடும்பத்திலும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

பின்னர் அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்துவிட்டார். நயன்தாரா பிரபுதேவாவை பிரிந்தது 2012 ஆம் ஆண்டு தான். இதன் பின்னர் தான் பிரபுதேவாவால் ஷாருக்கான் பட வாய்ப்பை நிராகரித்துள்ளார் நயன்தாரா. ஆம், இந்தியன் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நயந்தாராவிற்கு ஒரு சிறு ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

மேலும், அந்த படத்தில் இடம்பெற்ற ‘1234’ என்ற பாடலில் ஆடவும் வாய்ப்பு வந்து இருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பை நயன்தாரா நிராகரித்து விட்டாராம். காரணம், அந்த பாடலுக்கு அப்போதைய நயனின் முன்னாள் காதலரான பிரபுதேவா தான் கொரியாகிராபராக இருந்துள்ளார். அதனால் தான் நயன் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகுவது கூறப்படுகிறது. பின்னர் அந்த பாடலில் பிரியாமணி ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement