நயன்தாராவின் கனெக்ட் படத்தின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் நயன்தாரா. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

கனக்ட் திரைப்படம் :

இந்த நிலையில் மாயா, இரவாக்காலம், கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணகுமார் இயக்கத்தில் தற்போது நயன்தாரா நடித்திருக்கும் படம் கனெக்ட். இந்த படத்தில் அனுபம் கெர், சத்யராஜ், வினய், நஃபிசா ஹனியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது.

Advertisement

கேலிக்கு உள்ளான நயன் லுக் :

ஹாரர் திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் மொத்தமே 95 நிமிடங்கள் என்றும் படத்தில் இடைவேளை இல்லை என்றும் கூறப்பட்ட நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த படத்திற்கு இடைவெளி விட்டு திரையிடப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நயன்தாராவின் கனெக்ட் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் வயசாகிடுச்சு, நயன் கிழவி போல இருக்கிறார் என்று பலர் கேலி செய்தனர்.

Advertisement

நயன்தாரா பதிலடி :

இந்த நிலையில் இதற்கு பதில் கொடுத்துள்ள நயன்தாரா ‘‘கனெக்ட்’ படத்தின் ஒரு காட்சியிலிருக்கும் என்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து, அது வைரலானது. ‘வெயிட் போட்டால் வெயிட் போட்டீங்க எனவும், ஒல்லியாக இருந்தால் ஒல்லியாகிவிட்டீர்கள்’ என விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். கனெக்ட் படத்தின் அந்தப் புகைப்படத்தை பொறுத்தவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உடலமைப்பில்தான் இருந்தேன். அது தான் வைரலானது. எது செய்தாலும் தவறு என ஆகிவிடுகிறது. பொதுவாக, என் மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. அதைப் பற்றி யோசிப்பதுமில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement