அவர் படத்தில் நடித்தது தான் என் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு. புலம்பிய நயன்.

0
72580
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடிகையாக நினைப்பது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக ஆதிக்கம் செய்வது சாத்தியமில்லாத ஒரு விஷயம். ஆனால், அப்படி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் நடித்த படங்கள் என்றாலே அது பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்து விடுகிறது என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதிலும் இவர் லீட் ரோலில் நடித்த அனைத்து படங்களுமே வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா பெங்களூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் என்னவோ கேரளாதான் அதனால் இவரை பலரும் கேரள பயனாகத்தான் பார்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for nayanthara ghajini"

நயன்தாரா பார்ட் டைமில் மாடலாக பணியாற்றி வந்தார். பின்னர் மலையாள இயக்குனர் சத்தியன் என்பவர் இவரது சில மாடலிங் ப்ராஜக்டை கண்டு இவருக்கு ‘மானசினக்கரே’ என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து வந்த இவர் சரத்குமார் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தனது அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார் நயன்தாரா. அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்தார். அதிலும் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கஜினி’ திரைப்படத்தில் அம்மணி படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஷாக்கடைய வைத்தார்.

இதையும் பாருங்க : 50 வயதில் இரண்டாம் திருமணம். ராஜ்கிரணின் அழகிய குடும்பத்தை பார்த்ததுண்டா.

- Advertisement -

ஆனால், அந்த படத்திற்கு பின்னர் தான் நயன்தாராவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள நயன், கஜினி திரைப்படத்தில் நடித்தது தான், தனது திரை வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நயன், முருகதாஸ் இயக்கத்தில் நான் நடித்த ‘கஜினி’ திரைப்படம் தான் நான் என்னுடைய கேரியரில் செய்த மிகப்பெரிய தவறு. அந்த படத்தில் முருகதாஸ் என்னை காட்டிய விதம் அவர் சொன்ன கதையில் இருந்து மிகவும் மாறுபட்டு இருந்தது என்று ககூறியுள்ளார்.

Image result for nayanthara ghajini"

நயன்தாரா கஜினி படத்திற்கு பின்னர் பில்லா படத்தில் கூட பிகினி காட்சியில் நடித்திருந்தார். சொல்லப்போனால் அந்த படத்திற்கு பின்னர் தான் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கூட கிடைத்து. ஆனால், கஜினி படத்தில் நடித்தது குறித்து நயன் இப்படி பேசியுள்ளது பெரும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. கஜினி படத்திற்கு பின்னர் முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவே இல்லை. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது முருகதாஸ், ரஜினியை வைத்து எடுத்து வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் நயன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement