தமிழ் சினிமாவில் நடிகையாக நிலைப்பது எல்லாம் ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. ஆனால், 14 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’.தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.நடிகை நயன்தாரா கல்லூரியில் படிக்கும்போதே பகுதிநேர மாடலாக பணியாற்றி வந்தார். பின்னர் இவரை சத்யன் என்ற இயக்குனர் சந்தித்து ‘மனசினகாரே’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். முதலில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று நயன்தாரா கூறி இருக்கிறார். ஆனால், ‘மனசினகாரே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவே தனது நடிப்பைத் தொடர்ந்தார் நயன்தாரா.
அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்த நயன்தாராவிற்கு தமிழில் ‘ஐயா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழில் உள்ள விஜய் விக்ரம் சூர்யா தனுஷ் சிம்பு என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் நயன். இந்த நிலையில் நடிகை நயன்தாராவிற்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதை அவரே கூறியுள்ளார்.
நயன்தாரா அளித்த அந்த பேட்டியில் பேசுகையில் ‘என்னுடைய படத்தின் முதல் இயக்குனர் தான் எனக்கு வேறு பெயரை வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது ஒரு 30 பெயர்களை அவர் தேர்ந்தெடுத்து ஒரு லிஸ்ட் ஒன்றை என்னிடம் கொடுத்தார். அதில் எனக்கு இந்த பெயர் தான் எனக்கு பிடித்திருந்தது என்று அவரிடம் சொன்னேன். அவரும், நானும் இந்த பெயரை தான் தேர்ந்தெடுத்தேன் என்று என்னிடம் சொன்னார் ‘ என்று கூறியுள்ளார் நயன்.