விஸ்வாசத்தில் அஜித் தூக்குதுரை ஓகே..!நயன்தாராவின் பெயர் மற்றும் கதாபாத்திரம் இது தானம்.

0
376

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா மற்றும் அஜித் நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் சேர்ந்துள்ளனர். தற்போது இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த படத்தில் நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார் நடிகை நயன்தாரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சிவா விஸ்வாசம் படம் குறித்து பேசுகையில், இந்த படத்தில் அஜித் அஜித்திற்கு இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்றும் இந்த படத்தில் நடிகர் அஜித், தூக்குத்தூரை என்ற முரட்டு தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் கூறியிருந்தார்.

மேலும், இந்த படத்தில் நடிகர் தம்பி ராமைய்யா அஜித்தின் தாய் மாமனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் அஜித் இருக்கும் இந்த படத்தின் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் நடிகை நயன்தாரா கிராமத்து கெட்டப்பில் இருந்தார்.

தற்போது இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் பெயர் நிரஞ்சனா என்றும், இந்த படத்தில் அவருக்கு ஒரு பவர்புல்லானா கதாபாத்திரம் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.