“நிறைவேறிய நயன்தாராவின் ஆசை”..! முதல் முறையாக இந்த ஹீரோவுடன் கைகோர்க்க உள்ளார்.!

0
480
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு கால் பதித்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது முதல் படத்தில் சரத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை நயன்தாரா, அதன் பின்னர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

nayantharacute

ஆனால், இதுவரை கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை என்ற ஒரு குறை நடிகை நயன்தாராவிற்கு இருந்தது, அவரது ரசிகர்களுக்கும் ஒரு குறையாகவே இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த குறை நிவர்த்தியடைய போகிறது.

- Advertisement -

ஆம், நடிகை நயன்தாரா, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் “இந்தியன் 2” படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நடிகை நயன்தாராவிற்கு பெரும் தொகை பேசப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

kamal

அதே போல இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாராவிற்கு முன் பணம் கூட கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement